மெற்றோ நிலையங்களை சுத்தப்படுத்த தானியங்கி ரோபோக்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மெற்றோ நிலையங்களை சுத்தப்படுத்த தானியங்கி ரோபோக்கள்!!

சத்தலே தொடரூந்து நிலையத்தில், நேற்று வியாழக்கிழமை தானியங்கி ரோபோ ஒன்று இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. தொடரூந்து நிலையத்தை தானாகவே இது சுத்தம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
RATP இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. தினமும் மெற்றோ மற்றும் RER சேவைகளை 7 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள். 1.3 மில்லியன் சதுர மீட்டர்கால் தினமும் துடைக்கவேண்டிய தேவை உள்ளது. இந்த தேவையை குறித்த ரோபோக்கள் இனிமேல் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒருதடவை மின் நிரப்பப்பட்டால் 12 மணிநேரங்கள் தொடர்ச்சியாக மிக சுத்தமாக கூட்டி, தரையை தூய்மையாக வைத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணிநேரத்தில் 30,000 சதுர மீட்டர்களை தூய்மைப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மெற்றோ நிலையங்களில் உள்ள நடை மேடைகளை சுத்தப்படுத்தும் எனவும், சுவீங்கம் உட்பட தரையில் ஒட்டியுள்ள அனைத்தையும் மிக லாவகமாக அகற்றும் எனவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை Châtelet-les-Halles நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வெள்ளோட்டத்தைத் தொடர்ந்து, விரைவில் சேவைக்கு கொண்டுவர உள்ளதாகவும் RATP அறிவித்துள்ளது.

மூலக்கதை