பரிஸ் - வீதியில் இறங்கிய 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள்! - கடைகள் உடைப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  வீதியில் இறங்கிய 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள்!  கடைகள் உடைப்பு!!

நேற்று வியாழக்கிழமை, நாடு முழுவதும் தொடரூந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பரிசுக்குள் பெரும் கலவரங்களும் வன்முறைகளும் வெடித்தன. 
 
நேற்று காலை, 10.30 மணி அளவில் மார்செய்யில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து பரிசுக்குள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பரிசுக்குள் 15,300 பேர்வரை ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்ததாத தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் Boulevard Saint-Jacques பகுதியில் இடம்பெற்றுள்ளது. கலவரக்காரர்கள் கடைகளின் கண்ணாடிகளையும், குப்பை தொட்டிகளையும் அடித்து நொருக்கினர். சம்பவ இடத்துக்கு குவிக்கப்பட்ட காவல்துறையினர் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். 
 
தவிர, நேற்று காலை தெரிவித்திருந்ததன் படியே, நாள் முழுவதும் போக்குவரத்துக்கள் கணிசமாக தடைப்பட்டிருந்தன. Transilien, TGV, TER, Intercity போன்ற சேவைகள் ஐந்தில் நான்கு என சேவை தடைப்பட்டது. 
 
மார்செய்யில் அணிதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் கலவரத்தில் ஈடுபட்டனர். CGT  தொழிற்சங்கம் அறிவித்ததன் படி, 65,000 ஊழியர்கள் எனவும், காவல்துறையினர் தெரிவித்ததன் படி 6,000 ஊழியர்கள் கலந்துகொண்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை