வெற்றிதான் முக்கியம்... ஆரஞ்சு தொப்பி அல்ல! : கோஹ்லி கருத்து

தினகரன்  தினகரன்

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ஆர்சிபி கேப்டன் கோஹ்லி, ஆட்டமிழக்காமல் 92 ரன் விளாசியும் வெற்றியை கோட்டைவிட்டது வேதனை அளிப்பதாக விரக்தியுடன் கூறியுள்ளார். நடப்பு சீசனில் 4 போட்டியில் 201 ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்திருக்கும் அவர், மும்பை அணியிடம் தோற்றது குறித்து கூறுகையில் ‘கடுமையாக முயற்சித்தும் வெற்றி பெற முடியாதது வேதனை அளிக்கிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த தவறிவிட்டோம். ஆரஞ்சு தொப்பியை விட அணியின் வெற்றி தான் முக்கியம்’ என்றார். மும்பை அணிக்கு எதிராக 92* ரன் எடுத்த அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவை (4,558 ரன்) பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். கோஹ்லி இதுவரை 153 போட்டியில் விளையாடி 4,619 ரன் குவித்துள்ளார்.

மூலக்கதை