30 காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை! - சிக்கிய 2,200 கிலோ கஞ்சா!!

PARIS TAMIL  PARIS TAMIL
30 காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!  சிக்கிய 2,200 கிலோ கஞ்சா!!

Seine-et-Marne இல் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை மற்றும் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து 2.2 தொன்கள் எடையுள்ள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 
 
தேடுதல் மற்றும் குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 30 காவல்துறையினர், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு தொடர் தேடுதல் வேட்டை நடத்தியிருந்தனர். இதில் நள்ளிரவு 12.30 மணி அளவில் 2,200 தொன்கள் எடைகொண்ட கஞ்சா பொதிகளை, Seine-et-Marne இன் Ferrières -en-Brie பகுதியில் இருந்து மீட்டுள்ளனர். A4 சாலையை ஒட்டியுள்ள தரிப்பிடத்தில் நின்றிருந்த வாகனங்களை சோதனையிட்டே இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. 
 
இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் சட்டவிரோதமாக தொடர்ச்சியாக கஞ்சா பொதிகள் எடுத்துவரப்படுவதாக தெரிவித்த காவல்துறையினர், கடந்த மாதம் Essonne இல், 2.3 தொன்கள் எடையுள்ள கஞ்சாக்கள் மீட்கப்பட்டுள்ளதையும் நினைவு படுத்தினார்கள். 2.2 தொன் கஞ்சாவுடன் வியாழக்கிழமை இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை