வருத்தத்தில் மோகன்லால் பட நாயகி

தினமலர்  தினமலர்
வருத்தத்தில் மோகன்லால் பட நாயகி

கடந்த வருடம் மார்ச் மாதம் மலையாளத்தில் 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் வெளியானது படம் முழுக்க ஹீரோ, ஹீரோயின் உட்பட 85 கதாபாத்திரங்களில் முற்றிலும் புதுமுகங்களே நடித்திருந்தாலும் அதில் கதாநாயகிகளில் ஒருவராக லிச்சி என்கிற கேரக்டரில் நடித்த அன்னா ரேஷ்மா ராஜன் தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்தார்..

அந்தப்படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே மோகன்லாலுடன் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்ததில் இன்னும் பிரபலமானார் ரேஷ்மா ராஜன். அதன்பின் சோஷியல் மீடியாவில் பிரபலமான 'ஜிமிக்கி கம்மல்' பாடலில் இவரும் இடம்பிடித்தார் என்றாலும் அதன்பின் இவரை பற்றிய செய்திகளோ, இவருக்கான பட வாய்ப்புகளோ வந்தபாட்டை காணோம்.

மோகன்லாலுடன் நடித்ததை தொடர்ந்து மிகப்பெரிய நடிகையாக வருவோம் என நினைத்த ரேஷ்மா, தனக்கு கிடைத்த பப்ளிசிட்டியை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்கிற வருத்தத்தில் இருக்கிறார். தற்போது சச்சின் என்கிற ஒரு படம் மட்டுமே அவரது கைவசம் இருக்கிறது.

மூலக்கதை