சூடு­பி­டிக்­கும் குடி­நீர் விற்­பனை

தினமலர்  தினமலர்

சென்னை : சென்­னை­யில் கோடை வெப்­பம் தகிக்க துவங்­கி­யுள்ள நிலை­யில், குடி­நீர் கேன் விற்­பனை சூடு­பி­டித்­துள்­ளது.

சென்­னை­யில் இந்­தாண்டு கோடை வெப்­பம் மிக­வும் அதி­க­மாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதற்கு முன்­னோட்­ட­மாக, கடந்த சில தினங்­க­ளாக வெப்­பத்­தின் அளவு அதி­க­ரித்து வரு­கிறது. இந்­நி­லை­யில், சென்னை மற்­றும் புற­ந­கர் பகு­தி­யில் நிலத்­தடி நீர் குறைந்து வரு­வ­தால், குடி­நீர் விற்­பனை மெல்ல சூடு­பி­டிக்க துவங்­கி­யுள்­ளது.

புற­ந­க­ரி­லி­ருந்து லாரி­களில் எடுத்­து­வ­ரப்­படும் குடி­நீர், சென்­னை­யில் வீடு­வீ­டாக சென்று வினியோ­கிக்­கப்­பட்டு வரு­கிறது. இந்த வகை­யில் ஒரு குடம் 5- – 10 ரூபாய் வரை தண்­ணீர் விற்­ப­னை­யா­கிறது. அலு­வ­ல­கம் மற்­றும் வீடு­க­ளுக்கு கேன் மூலம் சப்­ளை­யா­கும் குடி­நீர் ஒரு கேன் 20 – 30 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது.தண்­ணீர் விற்­பனை சூடு­பி­டித்­துள்­ள­தால், பாரி­முனை, எம்.கே.பி.நகர், கொளத்­துார், மாத­வ­ரம், பெரம்­பூர் உள்­ளிட்ட பகு­தி­களில் திடீர் குடி­நீர் விற்­பனை கடை­கள் முளைத்­துள்­ளன.

மூலக்கதை