காய்கறி விதைகள் சந்தை இரு மடங்காக உயரும்

தினமலர்  தினமலர்
காய்கறி விதைகள் சந்தை இரு மடங்காக உயரும்

மும்பை : ‘இந்­தி­யா­வில், உள்­நாட்டு காய்­கறி விதை­கள் சந்தை, அடுத்த, ஐந்து ஆண்­டு­களில், இரு மடங்கு உயர்ந்து, 8,000 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்ரா’ தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தி­யா­வில், உடல் ஆரோக்­கி­யம் மற்­றும் ஊட்­டச்­சத்து தேவைக்­கான விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், மக்­கள் அதிக அள­வில் உண­வு­டன் காய்­க­றி­களை சேர்த்­துக் கொள்­கின்­ற­னர். அதன் அடிப்­ப­டை­யில், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், காய்­க­றி­கள் உற்­பத்தி, 35 சத­வீ­தம் அதி­க­ரிக்­கப்­பட வேண்­டும். அதற்­கேற்ப, காய்­கறி விதை­க­ளுக்­கான தேவை­யும் உய­ரும்.

தற்­போது, உள்­நாட்டு காய்­கறி விதை­கள் சந்தை மதிப்பு, 4,000 கோடி ரூபா­யாக உள்­ளது. இது, அடுத்த, ஐந்து ஆண்­டு­களில், இரு மடங்கு உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதை­யொட்டி, காய்­கறி பயிர் பரப்பு அதி­க­ரிக்­கப்­பட வேண்­டும். இத­னால், காய்­கறி உற்­பத்தி உய­ரும். இதில், கலப்பு விதை­கள் மூலம் விளை­விக்­கப்­படும் காய்­கறி வகை­க­ளின் பங்­க­ளிப்பு குறிப்­பி­டத்­தக்­க­தாக இருக்­கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை