அமெரிக்காவின் அடுத்த அதிரடி

தினமலர்  தினமலர்
அமெரிக்காவின் அடுத்த அதிரடி

வாஷிங்டன் : இந்­தியா, சீனா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும், ‘ஸ்டெய்ன்­லெஸ் ஸ்டீல் பிளாஞ்ச்’ பொருட்­க­ளுக்கு, அதிக பொருள் குவிப்பு வரி விதிக்க, அமெ­ரிக்க அரசு முடிவு செய்­துள்­ளது.

இது குறித்து வெளி­யி­டப்­பட்ட அறிக்கை: சீனா மற்­றும் இந்­தி­யா­வில் இருந்து, குறைந்த விலை­யில் ஸ்டெ­யின்­லெஸ் ஸ்டீல் பிளாஞ்­சு­கள் இறக்­கு­மதி ஆவ­தால், உள்­நாட்டு நிறு­வ­னங்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக புகார்­கள் வந்­தன. இதை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில், சீனா, 257.11 சத­வீ­தம்; இந்­தியா, 145.25 சத­வீ­தம், விலை குறை­வாக, ஸ்டெ­யின்­லெஸ் ஸ்டீல் பிளாஞ்­சு­களை ஏற்­று­மதி செய்­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, இந்­தியா,சீனா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் ஸ்டெ­யின்­லெஸ் ஸ்டீல் பிளாஞ்­சு­க­ளுக்கு, அதிக பொருள் குவிப்பு வரி விதிக்க, முடிவு செய்­யப்­பட்­டு உள்­ளது. இப்­பொ­ருட்­களை இறக்­கு­மதி செய்­யும் அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளி­டம், வரியை ரொக்­க­மாக வசூ­லிக்­கு­மாறு, சுங்­கத் துறை­யி­டம் தெரி­விக்­கப்­படும்.

கடந்த, 2016ல், இந்­தி­யா­வும், சீனா­வும், முறையே, 3.21 கோடி டாலர் மற்­றும், 1.63 கோடி டாலர் மதிப்­பி­லான, ஸ்டெ­யின்­லெஸ் ஸ்டீல் பிளாஞ்­சு­களை அமெ­ரிக்­கா­விற்கு ஏற்­று­மதி செய்­துள்­ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை