மளிகை பொருட்கள் வாங்க ஏற்ற நேரம் இது

தினமலர்  தினமலர்
மளிகை பொருட்கள் வாங்க ஏற்ற நேரம் இது

புதிய வரவு அதி­க­ரித்­து உள்­ள­தால், வீட்டு மளிகை பொருட்­களை மொத்­த­மாக வாங்­கு­வ­தில் பெண்­கள் முனைப்பு காட்டி வரு­கின்­ற­னர்.

வசந்­த­கா­லம் துவங்­கி­உள்­ளதை தொடர்ந்து, அறு­வடை முடிந்து நெல், பருப்பு வகை­கள் அதி­க­ளவு வரத் துவங்­கி­யுள்­ளன. பருப்பு வகை­க­ளின் வெளி­நாட்டு கொள்­மு­த­லுக்கு தடை விதித்­துள்ள நிலை­யில், ஆந்­திரா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளி­லி­ருந்து கடலை பருப்பு உள்­ளிட்­டவை அதி­க­ளவு சென்­னைக்கு வரத் துவங்­கி­யுள்­ளன. அதே போல் கர்­நா­டகா, குஜ­ராத்­தி­லி­ருந்து துவ­ரம் பருப்பு வகை­கள் வரத் துவங்­கி­யுள்­ளது.

மொத்த விலை கடை­யில் கடலை பருப்பு ஒரு கிலோ, 40 – 50 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது. துவ­ரம் பருப்பு, 61 – 71 ரூபாய் வரை விற்­ப­னை­ஆகிறது. பாசிப் பருப்பு, 65 – 71 ரூபாய் வரை­யி­லும்; உளுத்­தம் பருப்பு, 60 – 69 ரூபாய் வரை­யி­லும் விற்­ப­னைக்கு வந்­தள்­ளது. மசூர் பருப்பு, 43 ரூபாய்க்கு விற்­ப­னை­யாகிறது.

இந்­நி­லை­யில், வரத்து அதி­க­ரித்­துள்­ள­தால், வீட்­டுத் தேவைக்­கான பருப்பு, புளி, மிள­காய் உள்­ளிட்ட மளிகை பொருட்­களை மொத்­த­மாக வாங்­கு­வ­தில் பெண்­கள் முனைப்பு காட்­டத் துவங்­கி­ உள்­ள­னர். கொத்­த­வால்­சா­வடி மொத்த விலை கடை­களில் புற­ந­கர் பெண்­கள் கூட்­டம் கூட்­ட­மாக மளிகை பொருட்­களை வாங்கி வரு­கின்­ற­னர்.

இது­ கு­றித்து வியா­பா­ரி­கள் கூறு­கை­யில், ‘பிப்­ர­வரி – மார்ச் மாதத்­தில் வரத்து அதி­கம் இருக்­கும்.இந்த நேரத்­தில் வீட்­டுக்­கான மளி­கைப் பொருட்­களை, 10 பேர் கூட்­டாக சேர்ந்து மொத்­த­மாக வாங்கி பிரித்து கொள்­வர். இத­னால் வீட்­டுச் செல­வில், 30 சத­வீ­தம் அள­வுக்கு சேமிக்க முடி­யும். பொரு­ளும் தர­மாக கிடைக்­கும்’ என்­றனர்.

அரக்­கோ­ணம், வாணி­யம்­பேட்­டையை சேர்ந்த அம்­பிகா, கலா, விஜயா உள்­ளிட்­டோர் கூறி­ய­தா­வது: நாங்­கள் ஆண்­டுக்கு ஒரு முறை இவ்­வாறு மளி­கைப் பொருட்­களை மொத்­த­மாக வாங்கி பிரித்து கொள்­வோம். இத­னால் குடும்­பச் செல­வில், 40 சத­வீ­தத்­திற்கு மேல் சேமிக்க முடி­யும். மொத்­த­மாக வாங்­கும் போது, 1 கிலோ 40 ரூபாய்க்கு கிடைக்­கும் கடலை பருப்பு, சில்­ல­ரை­யாக ஒவ்­வொரு மாத­மும் வாங்­கி­னால் ஒரு கிலோ­வுக்கு, 70 ரூபாய் வரை தர­வேண்­டி­யி­ருக்­கும். இந்த மாதத்­தில் தான் சாகு­படி முடிந்து வரத்து அதி­க­மாக இருக்­கும். அத­னால் விலை­யும் குறை­வாக இருக்­கும். நகையை விற்­றா­வது இந்த மாதத்­தில் வந்து மளிகை பொருட்­களை வாங்கி விடு­வோம். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

மிள­காய் நில­வ­ரம்:
வட­மா­நி­லங்­க­ளி­ல் இருந்து வரத்து அதி­க­ரித்­துள்­ள­தால், மிள­காய், தனியா ரகங்­கள் அதி­க­ளவு குவிந்­துள்­ளன.சென்னை கொத்­த­வால்­சா­வ­டி­யில் மிள­காய், தனியா வகை­கள் அதி­க­ளவு விற்­ப­னைக்கு வந்­துள்­ளன. ராஜஸ்­தான், ம.பி.,யில் இருந்து வந்­துள்ள தனியா, 60 – 70 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது.

விலை நில­வ­ரம் குறித்து டி.ராஜேந்­தி­ரன் கூறி­ய­தா­வது: புளி ரகத்­தில் கரிப்­புளி, 175 – 185 ரூபாய்; பிள­வர் புளி, 110 – 115 ரூபாய்; தோசைப்­புளி, 105 –110 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. பூண்டு, 1 கிலோ, 22 – 65 ரூபாய் வரை விற்­ப­னைக்கு உள்­ளது. பழைய மிள­காய், 1 கிலோ, 125 – 135 ரூபா­யி­லும், புதி­யது, 160 – 210 ரூபா­யி­லும் குண்­டூ­ரில் இருந்து வந்­துள்­ளது. நீள மிள­காய் ஒரு கிலோ, 100– 103 ரூபாய்க்கு உள்­ளது. சேலம், ஈரோட்­டில் இருந்து வந்­துள்ள மஞ்­சள், 1 கிலோ, 90 – 120 ரூபாய்க்கு கிடைக்­கும்.

மூலக்கதை