கோத்ரெஜ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு ரோல்ஸ்ராய்ஸ் ரூ.200 கோடி, ‘ஆர்டர்’

தினமலர்  தினமலர்
கோத்ரெஜ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு ரோல்ஸ்ராய்ஸ் ரூ.200 கோடி, ‘ஆர்டர்’

மும்பை : கோத்­ரெஜ் குழு­மத்­தைச் சேர்ந்த, கோத்­ரெஜ் ஏரோஸ்­பேஸ் நிறு­வ­னத்­திற்கு, ரோல்ஸ்­ராய்ஸ் நிறு­வ­னத்­தி­டம் இருந்து, 200 கோடி ரூபாய் மதிப்­பிற்கு, விமான இன்­ஜின் உதி­ரி­பா­கங்­களை தயா­ரித்­த­ளிக்­கும், ‘ஆர்­டர்’ கிடைத்­து உள்­ளது.

இது குறித்து, இக்­கு­ழு­மத்­தின் தலை­வர், ஜாம்­சை­யது கோத்­ரெஜ் கூறி­ய­தா­வது: ரோல்ஸ்­ராய்ஸ் நிறு­வ­னத்­து­டன், 2014ல், முதன்­மு­த­லில், உதி­ரி­பாக தயா­ரிப்­பிற்­காக, ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டது. தற்­போது, அந்­நி­று­வ­னத்­தி­டம் இருந்து, 200 கோடி ரூபாய் மதிப்­பி­லான, ‘ஆர்­டர்’ கிடைத்­துள்­ளது. இதன் மூலம், ரோல்ஸ்­ராய்ஸ் நிறு­வ­னத்­தின், விமான இன்­ஜின் தயா­ரிப்­புத் துறைக்கு தேவை­யான உதிரி பாகங்­களை, கோத்­ரெஜ் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு வழங்­கும்.

நிறு­வ­னம், 50 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், நவீன வச­தி­க­ளு­டன், ‘ஷீட் மெட்­டல் பிராக்­கட்’ சாத­னங்­கள் தயா­ரிக்­கும் தொழிற்­சா­லையை அமைத்­துள்­ளது. இங்கு, அடுத்த இரண்டு அல்­லது மூன்று மாதங்­க­ளுக்­குள், உற்­பத்தி துவங்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை