2019 அம் அண்டு முதல் அனைத்து மெற்றோக்களிலும் 4G இணைய சேவை!!

PARIS TAMIL  PARIS TAMIL
2019 அம் அண்டு முதல் அனைத்து மெற்றோக்களிலும் 4G இணைய சேவை!!

கடந்த 2016 ஆம் ஆண்டில் திட்டமிட்ப்பட்டு, பின்னர் 2017 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட மெற்றோக்களுக்கான 4G இணைய சேவை 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வெள்ளிக்கிழமை இரவு RATP தகவல் தொழில்நுட்ப இயக்குனர் Michel Cordival தெரிவிக்கும் போது, 'நாங்கள் அதற்கான சேவைக்காக வேகமாக உழைத்து வருகிறோம்!' என் தெரிவித்தார். '2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் 60 க்கும் மேற்பட்ட நிலையங்களுக்கும் அதன் சுரங்க பாதைகளுக்குள் அதிவேக 4G இணையம் வழங்கிவிடுவோம். மிக சவாலான பணி என்றபோதும் தொடர்ந்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றது' என அவர் மேலும் குறிப்பிட்டார். 
 
2019 ஆம் ஆண்டின் முடிவுக்குள் மொத்தமாக 120 நிலையங்களுக்கு சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுவிடும் எனவும், முன்னதாக 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த சேவையினை கொண்டுவர முயற்சித்தோம், ஆனால் பல நடைமுறைச் சிக்கல்களை சந்தித்தோம்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

மூலக்கதை