இல்-து-பிரான்ஸ் - அடுத்த சில நாட்களுக்கு தொடரும் குளிர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
இல்துபிரான்ஸ்  அடுத்த சில நாட்களுக்கு தொடரும் குளிர்!!

நேற்று சனிக்கிழமை, இல்-து-பிரான்சுக்குள் பரவலாக இடம்பெற்ற பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரைத் தொடர்ந்து, இன்றில் இருந்து மேலும் சில நாட்களுக்கு கடும் குளிர் தொடரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
பரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமையில் இருந்து  கடும் குளிர் நிலவும் எனவும், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பனிப்பொழிவில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. குறிப்பாக Val d'Oise இல் 10 cm வரை பனிப்பொழிவு இடம்பெற்றிருந்தது. N184 மற்றும் N1 ஆகிய சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. தவிர, சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னர் 6 விபத்துக்கள் பதிவாகியுள்ளது. 
 
நிலவி வரும் கடும் குளிரைத்தொடர்ந்து, வீதிகளில் உறங்கும் வீடற்றவர்களுக்காக மேலதிகமான 1.677 பேர்கள் தங்கக்கூடிய தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை