பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்

தினகரன்  தினகரன்

இண்டியன் வெல்ஸ் : பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தகுதி பெற்றார். கால் இறுதியில் ஸ்பெயினின் கர்லா சுவாரெஸ் நவர்ரோவுடன் நேற்று மோதிய வீனஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் ரஷ்யாவின் டாரியா கசட்கினா (20வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-0, 6-2 என்ற நேர் செட்களில் ஏஞ்சலிக் கெர்பரை (10வது ரேங்க், ஜெர்மனி) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். டாரியா முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்த போட்டி வெறும் 58 நிமிடத்திலேயே முடிந்தது குறிப்பிடத்தக்கது.அரை இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் - டாரியா கசட்கினா மோதுகின்றனர். மற்றொரு அரை இறுதியில் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) - நவோமி ஒசாகா (ஜப்பான்) பலப்பரீட்சையில் இறங்குகின்றனர். பெடரர் முன்னேற்றம்: இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், நம்பர் 1 வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) 7-5, 6-1 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் ஹையான் சுங்கை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் (7வது ரேங்க்) 6-2, 4-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் குரோஷியாவின் போர்னா கோரிக்கிடம் போராடி தோற்றார்.

மூலக்கதை