ஜில்லென்ற விலையில் சுவையான பழங்கள்

தினமலர்  தினமலர்
ஜில்லென்ற விலையில் சுவையான பழங்கள்

சென்னை : குளிர்ச்சி தரும் பழங்­கள் ஜில்­லென்ற விலை­யில் விற்­ப­னைக்கு வந்­துள்ளன.
கோடை துவங்கி உள்ள நிலை­யில், குளிர்ச்சி தரும் பழங்­க­ளான கிவி, அத்தி, கிர்­ணி­ப­ழம், தர்­பூ­சணி ஆகி­ய­வற்­றின் விற்­பனை, சென்­னை­யில் களை­கட்­டி­யுள்­ளது. வெயில் காலத்­தில் உட­லுக்கு வைட்­ட­மின், சி சத்து அதி­கம் தேவைப்­படும். இந்த வேளை­யில் நம் உண­வில் சரி­பாதி பழங்­களை உண­வாக எடுத்­துக் கொள்­வது நல்­ல­தாக அமை­யும்.
பழங்­களின் அதி­கப்­ப­டி­யான விலையை கார­ணம் காட்டி, வாங்க முடி­ய­வில்­லையே என வருத்­தப்­பட தேவை­யில்லை. தற்­போது, குளிர்ச்சி தரும் பழங்­களின் விலை கணி­ச­மாக குறைந்­துள்­ளது. ஒரு கிலோ கிவி பழம், 100 – 120 வரை விற்­ப­னை­யா­கிறது.

கிர்ணி பழம், ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. அத்­திப் பழம் ஒரு பெட்டி, 50 ரூபாய்க்கு விற்­ப­னைக்கு வந்­துள்­ளது

வாழை விலை அதி­க­ரிப்பு:
கடந்­தாண்டை காட்­டி­லும், செவ்­வாழை பழம் கிலோ­வுக்கு, 25 ரூபாய் விலை ஏறி­யுள்­ளது. தமி­ழக உற்­பத்தி குறைந்­த­தா­லேயே விலை ஏறி­யுள்­ள­தாக, பல்­லா­வ­ரத்தை சேர்ந்த வாழை வியா­பாரி, ஹரி­ஹ­ரன் கூறி­னார்.
அவர் மேலும் கூறு­கை­யில், ‘தமி­ழ­கத்­தில் வாழை உற்­பத்தி குறைந்து விட்­டது. ஆந்­திரா, கர்­நா­ட­கா­வில் இருந்து தான், பழங்­கள் இறக்­கு­ம­தி­யா­கின்றன. செவ்­வாழை பழம் ஒரு கிலோ, 65 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. எலக்கி, 45 ரூபாய்; கற்­பூர வாழை, 35 ரூபாய் மலை வாழை, 75 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கிறது’ என்­றார்.

மூலக்கதை