அமெரிக்காவின் வரி உயர்வால் இறால் ஏற்றுமதி லாபம் குறையும்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவின் வரி உயர்வால் இறால் ஏற்றுமதி லாபம் குறையும்

மும்பை : அமெ­ரிக்கா, சமீ­பத்­தில், இந்­திய இறால்­கள் இறக்­கு­ம­திக்கு விதித்த, அதிக பொருள் குவிப்பு வரியை, 0.84 சத­வீ­தத்­தில் இருந்து, 2.34 சத­வீ­த­மாக உயர்த்­தி­உள்­ளது.

‘இத­னால், இந்­திய இறால் ஏற்­று­ம­தி­யா­ளர்­களின் லாப வரம்பு குறை­யும்; வரி உயர்வு, இறால் பண்­ணை­கள் அல்­லது விவ­சா­யி­கள் மீது சுமத்­தப்­படும்’ என, ‘இக்ரா’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.அமெ­ரிக்­கா­வின் இறால் இறக்­கு­ம­தி­யில், இந்­தி­யா­வின் பங்கு, 32 சத­வீ­த­மாக உள்­ளது.கடந்த ஆண்டு, வியட்­னாம், சீனா, தாய்­லாந்து நாடு­களில், இறால் உற்­பத்தி குறைந்­தது. இத­னால், அமெ­ரிக்­கா­விற்­கான இந்­தி­யா­வின் இறால் ஏற்­று­மதி, 45 சத­வீ­த­மாக உயர்ந்­தது.நடப்பு, 2017- – 18ம் நிதி­யாண்­டில், ஏப்., – டிச., வரை­யி­லான ஒன்­பது மாதங்­களில், இந்­தி­யா­வின் இறால் ஏற்­று­மதி, 29 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்­ளது.

அமெ­ரிக்கா, வியட்­னாம் ஆகிய நாடு­க­ளுக்கு அதிக அள­வில் இறால் ஏற்­று­மதி செய்­யப்­பட்­ட­தால், இந்த வளர்ச்சி சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது. குறிப்­பாக, மதிப்­பீட்டு காலத்­தில் வியட்­னா­மிற்­கான இந்­தி­யா­வின் இறால் ஏற்­று­மதி, 26.3 சத­வீ­த­மாக உயர்ந்­து உள்­ளது.

மூலக்கதை