நல்ல செக்கு எண்ணெய் எது? புற்றீசலாய் முளைக்கும் புதிய கடைகள்!

தினமலர்  தினமலர்
நல்ல செக்கு எண்ணெய் எது? புற்றீசலாய் முளைக்கும் புதிய கடைகள்!

சமீ­ப­கா­ல­மாக, மக்­கள், ஆரோக்­கி­ய­மான, பழ­மை­யான உணவு பழக்­கத்­திற்கு மாறி வரு­கின்­ற­னர். ‘ஆர்­கா­னிக்’ காய்­க­றி­கள், செக்கு எண்­ணெய் ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்­து­வது அதி­க­ரித்­துள்­ளது. இதை பயன்­ப­டுத்தி, ஏரா­ள­மான கடை­கள் முளைத்­துள்ளன.
சென்­னை­யில் செக்கு எண்­ணெய் விற்­பனை கடை­கள், திடீ­ரென அதி­க­ரித்­துள்ளன. அதே போல் ஆர்­கா­னிக் என்ற பெய­ரில், மளிகை கடை, காய்­கறி கடை­களும் அதி­க­ரித்­துள்ளன.இது­வரை கிரா­மங்­களில் மட்­டுமே காணப்­பட்ட மரச்செக்கு, சமீப கால­மாக, சென்னை நக­ரில் ஏரி­யா­வுக்கு ஒன்று என முளைத்து வரு­கிறது.
இதில், எண்­ணெயை மட்­டுமே வாங்கி வந்து, அதை, செக்­கில் ஆட்­டிய எண்­ணெய் என, விற்­பனை செய்­யும் கடை­களும், ஆங்­காங்கே முளைத்­துள்ளன.
இது­ கு­றித்து, வியா­சர்­பா­டியைச் சேர்ந்த, மரச் செக்கு எண்­ணெய் வியா­பாரி, தேவி பாண்­டு­ரங்­கன் கூறி­ய­தா­வது:செக்கு எண்­ணெய்க்கு தற்­போது மவுசு ஏற்­பட்­டுள்­ளது. இதை பயன்­படுத்தி ஆங்­காங்கே, செக்குஎண்­ணெய் கடை­கள் முளைத்து வரு­கின்றன.மரச் செக்கு என்­றால், கடை­யும் செக்­கும், உர­லும் மரத்­தால் இருக்க வேண்­டும். வாகை மரம் என்­றால் இன்­னும் சிறப்பு.
அரவை நேர­மும் அதி­க­மாக இருக்க வேண்­டும். இத­னால், 20 சத­வீத எண்­ணெய் குறை­வா­கவே கிடைத்­தா­லும், கொழுப்பு அற்ற, உட­லுக்கு ஆரோக்­கி­ய­மான எண்­ணெய் கிடைக்­கும். இரும்பு செக்­கில் ஆட்­டும் எண்­ணெ­யால், உட­லுக்கு எந்த நன்­மை­யும் இல்லை. மேலும், கட­லை­யில் கல் இல்­லாத, கெட்­டுப்­போ­காத கட­லையை உப­யோ­கிப்­பது நல்­லது. இல்­லா­விட்­டால், மொத்த எண்­ணெ­யும் கெட்­டுப்­போக வாய்ப்­புண்டு.
தற்­போது, சுத்­த­மான நாட்டு மரச் செக்­கில் ஆட்­டிய கடலை எண்­ணெய், ஒரு கிலோ, 230 ரூபாய்க்கு கிடைக்­கிறது. தேங்­காய் எண்­ணெய், 320 ரூபாய்க்­கும், நல்­லெண்­ணெய், 290 ரூபாய்க்­கும் கிடைக்­கிறது.எண்­ணெய்க்­கான எள் ஒரு கிலோ, 110 ரூபாய்க்­கும், கடலை, 70 ரூபாய்க்­கும், தேங்­காய், 140 – 170 ரூபாய் வரை­யி­லும் விற்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அவர் கூறினார்.
சான்­றி­தழ்
பொது­வாக, மரச் செக்­கில் எண்­ணெய் ஆட்டும் போது, 15 கிலோ கட­லையை அரைக்க, ஒன்­றரை மணி நேர­மா­கும். 5.5 – 6 கிலோ எண்­ணெய் கிடைக்­கும். அதுவே, இரும்­புச் செக்­கில் ஆட்­டி­னால், அரை மணி நேரத்­தில் ஆட்டி விடு­வர். எண்­ணெ­யும், 2 கிலோ கூடு­த­லாக கிடைக்­கும். உண்­மை­யாக மரச்­ செக்­கில் எண்­ணெய் ஆட்­டு­பவர்­கள், செக்கை பரி­சோ­திக்க அனு­ம­திப்­பர்.தற்­போது செக்கு எண்­ணெய் விற்­பனை நிலை­யங்­களில், உணவு பாது­காப்­புத் துறை­யின் சான்­றி­தழ் வைத்­தி­ருக்க அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­த­கைய சான்­றி­தழ்­களை பார்த்து, வாடிக்­கை­யா­ளர்­கள் உண்­மையை கண்­ட­றி­ய­லாம்.– நமது நிரு­பர் –

மூலக்கதை