சோசலிச கட்சியை பின்னுக்குத் தள்ளிய மக்ரோனின் கட்சி!!

PARIS TAMIL  PARIS TAMIL
சோசலிச கட்சியை பின்னுக்குத் தள்ளிய மக்ரோனின் கட்சி!!

பிரான்சில் பல தலைமுறைகளை கடந்த சோசலிச கட்சியின் செல்வாக்கை பின்னுக்குத் தள்ளி, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கட்சி முன்னுக்கு உள்ளது. புதிதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவில் இத்தகவல் வெளியாகியுள்ளது. 
 
தற்போதைய சூழ்நிலையில் எந்த அரசியல் கட்சியின் மீது உங்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது என கேட்கப்பட்ட கேள்விக்கு, மூன்றில் ஒருவர் (33 வீதமானோர்) ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ஓ மார்ஷ் (La République en Marche) கட்சி என குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை சோசலிச கட்சியின் மீது 13 வீதமானோர் மாத்திரமே நன்மதிப்பு வைத்துள்ளனர். நேற்று புதன்கிழமை வெளியான Elabe கருத்துக்கணிப்பில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. 
 
அதேவேளை, மரீன்-லூ-பென்னின் தேசிய முன்னணி கட்சி 17 வீதமான நன்மதிப்பையும், le Modem கட்சி 16 வீதத்தையும், la France கட்சி 16 வீத நன்மதிப்பையும் கொண்டுள்ளது. அதேவேளை, 'நன்மதிப்பு இல்லாத கட்சி' என கேட்கப்பட்ட கேள்விக்கு  62 வீதமானோர் சோசலிச கட்சியை தேர்வு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை