கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் மலிங்கா

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் மலிங்கா

மும்பை: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்கியவர் லசித் மலிங்கா. 35 வயதான மலிங்கா, யார்கர் ஸ்பெஷலிஸ்ட்.

இலங்கை அணிக்காக 30 டெஸ்ட்டில் ஆடி 101 விக்கெட்டும். 204 ஒருநாள் போட்டிகளில் 301 விக்கெட்டும்.

68 டி. 20 போட்டிகளில் 90 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா, ஒருநாள் மற்றும் டி. 20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.

அண்மைகாலமாக பார்ம் இழந்து அணியில் இடம் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சொந்த மண்ணில் கடந்த செப்டம்பரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியதே அவரின் கடைசி தொடராகும். தொடர் காயத்தால் அவரின் பந்து வீச்சு திறன் குறைந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்திலும் அவர் ஏலம் போக வில்லை இந்நிலையில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி, பந்து வீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது. இதுபற்றி மலிங்கா அளித்துள்ள பேட்டி: சர்வதேச கிரிக்கெட்டில் இனி விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை.

விரைவில் என் ஓய்வு முடிவை அறிவிக்க உள்ளேன்.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் இன்னும் பேச வில்லை.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அடுத்ததாக எனது புதிய அத்தியாயத்தை தொடக்க உள்ளேன்.

கிரிக்கெட்டில் விளையாடுவதில் என் நேரம் முடிந்து விட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை