வலைதளத்தில் போலிகள் விற்பனை: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டு திட்டம்

தினமலர்  தினமலர்
வலைதளத்தில் போலிகள் விற்பனை: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டு திட்டம்

புதுடில்லி:வலை­த­ளத்­தில் விற்­கப்­படும் போலி பொருட்­க­ளால், பாதிக்­கப்­படும் நுகர்­வோ­ருக்கு இழப்­பீடு தரும் திட்­டம் குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.
இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:வலை­த­ளங்­களில் விற்­பனை செய்­யப்­படும் பல்­வேறு பொருட்­களில், போலி­கள் அதி­க­ரித்­தி­ருப்­பது, அர­சின் கவ­னத்­திற்கு வந்­துள்­ளது. இதை கட்­டுப்­ப­டுத்த, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.
இது தொடர்­பாக, வலை­தள விற்­பனை நிறு­வ­னங்­க­ளு­டன், மத்­திய நுகர்­வோர் விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம், தொழில் கொள்கை மற்­றும் மேம்­பாட்டு துறை அதி­கா­ரி­கள் ஆலோ­சனை நடத்தி வரு­கின்­ற­னர்.இதை­ய­டுத்து, வலை­த­ளத்­தில் போலி பொருட்­களின் விற்­ப­னையை கட்­டுப்­ப­டுத்­த­வும், பாதிக்­கப்­படும் நுகர்­வோ­ருக்கு இழப்­பீடு தர­வும் வகை செய்­யும் செயல் திட்­டம் உரு­வாக்­கப்­படும்.போலி பொருட்­கள், அறி­வு­சார் சொத்­து­ரி­மைக்கு சவா­லா­க­வும், ‘பிராண்டு’ நிறு­வ­னங்­களின் நம்­ப­கத்­தன்­மையை சீர்­கு­லைப்­ப­தா­க­வும் உள்ளன.அத்­து­டன், அர­சின் வரி வரு­வாய்க்­கும், ‘வேட்டு’ வைத்து, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு தடை­யாக உள்ளன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை