‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனை ரூ.65 லட்சம் கோடியை எட்டும்

தினமலர்  தினமலர்
‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனை ரூ.65 லட்சம் கோடியை எட்டும்

புதுடில்லி:‘இந்­தி­யா­வில், 2025ல், 65 லட்­சம் கோடி ரூபாய் அள­விற்கு, ‘டிஜிட்­டல்’ எனப்­படும், மின்­னணு சார்ந்த பணப் பரி­வர்த்­த­னை­கள் நடை­பெ­றும்’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.
இது குறித்து, ஏ.சி.ஐ., வேர்ல்­டு­வைடு நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:இந்­தி­யா­வில் தற்­போது, 9 கோடி பேர் மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்­கின்­ற­னர். இது, 2020ல், மூன்று மடங்கு அதி­க­ரித்து, 30 கோடியை தாண்­டும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. 2025ல், ஆண்­டுக்கு, 65 லட்­சம் கோடி ரூபாய் அள­விற்கு, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள் நடக்­கும்.அடுத்த இரு ஆண்­டு­களில், ஸ்மார்ட் போன் பயன்­ப­டுத்­து­வோர் எண்­ணிக்கை, இரு மடங்கு அதி­க­ரித்து, 50 கோடி­யாக உய­ரும்.
குறைந்த விலை­யில் கிடைக்­கும் ஸ்மார்ட் போன்­கள், இல­வச டேட்டா, விரை­வான தக­வல் பரி­மாற்­றம் போன்­ற­வற்­றால், ஸ்மார்ட் போன் வாயி­லான பணப் பரி­வர்த்­த­னை­கள் பெரு­கும்.மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களை, நம்­ப­கத்­தன்­மை­யு­டன் மேற்­கொள்­வ­தற்­கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு, நிறு­வ­னங்­கள் அதி­கம் செல­விட நேரும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை