தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவீதமாக உயர்வு

தினமலர்  தினமலர்
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவீதமாக உயர்வு

புதுடில்லி:நாட்­டின், தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, ஜன­வ­ரி­யில், 7.5 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, 2017 டிசம்­ப­ரில், 7.1 சத­வீ­த­மா­க­வும், நவம்­ப­ரில், 25 மாதங்­களில் இல்­லாத அள­வில், 8.4 சத­வீ­த­மா­க­வும் அதி­க­ரித்­தி­ருந்­தது.தொழில் துறை உற்­பத்தி குறி­யீட்டை கணக்­கி­டு­வ­தில், தயா­ரிப்­புத் துறை, நான்­கில் மூன்று பங்கை கொண்­டுள்­ளது.
இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், தயா­ரிப்­புத் துறை­யின் உற்­பத்தி வளர்ச்சி, 8.7 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, 2017 டிசம்­ப­ரில், 8.5 சத­வீ­த­மாக இருந்­தது.அதே சம­யம், இதே காலத்­தில், பொறி­யி­யல் சாத­னங்­கள் துறை­யின் உற்­பத்தி வளர்ச்சி, 16.4 சத­வீ­தத்­தில் இருந்து, 14.6 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.
மதிப்­பீட்டு மாதத்­தில், நுகர்­வோர் சாத­னங்­கள் துறை­யின் உற்­பத்தி வளர்ச்சி, 10.5 சத­வீ­த­மாக உள்­ளது.நடப்பு, 2017- – 18ம் நிதி­ஆண்­டில், ஏப்., – ஜன., வரை­யி­லான, 10 மாதங்­களில், நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, 4.1 சத­வீ­த­மாக உள்­ளது என, மத்­திய புள்­ளி­யி­யல் துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை