காய்கறிகள் விலை சரிவால் சில்லரை பணவீக்கம் குறைந்தது

தினமலர்  தினமலர்
காய்கறிகள் விலை சரிவால் சில்லரை பணவீக்கம் குறைந்தது

புதுடில்லி:பிப்­ர­வ­ரி­யில், காய்­க­றி­கள் விலை சரி­வால், நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம், 4.4 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, ஜன­வ­ரி­யில், 5.07 சத­வீ­த­மாக இருந்­தது.இதே காலத்­தில், உண­வுப் பொருட்­கள் பண­வீக்­கம், 4.58 சத­வீ­தத்­தில் இருந்து, 3.26 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
காய்­க­றி­கள் விலை, 26.97 சத­வீ­தத்­தில் இருந்து, 17.57 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­து உள்­ளது. வீட்­டு­வ­சதி பண­வீக்­கம், 8.33 சத­வீ­தத்­தில் இருந்து, 8.28 சத­வீ­த­மாக இறக்­கம் கண்­டுள்­ளது.ரிசர்வ் வங்கி, நடப்பு, 2017 -– 18ம் நிதி­யாண்­டின், அக்., – மார்ச் வரை­யி­லான இரண்­டா­வது அரை­யாண்­டில், சில்­லரை பண­வீக்­கம், 4.3 -– 4.7 சத­வீ­த­மாக இருக்­கும் என, மதிப்­பிட்­டுள்­ளது.
உண­வுப் பொருட்­கள் விலை உயர்­வால், அக்., – டிச., வரை­யி­லான மூன்­றா­வது காலாண்­டில், சில்­லரை பண­வீக்­கம், 4.6 சத­வீ­த­மாக இருந்­தது.நடப்பு நான்­கா­வது காலாண்­டில், சில்­லரை பண­வீக்­கம், 5.1 சத­வீ­த­மாக இருக்­கும். 2018 -– 19ம் நிதி­யாண்­டின், முதல் அரை­யாண்­டில், சில்­லரை பண­வீக்­கம், 5.1 – 5.6 சத­வீ­த­மாக இருக்­கும். இது, இரண்­டா­வது அரை­யாண்­டில், 4.5 – -4.6 சத­வீ­த­மாக குறை­யும் என, ரிசர்வ் வங்கி மதிப்­பிட்­டுள்­ளது.

மூலக்கதை