ஆஸ்திரேலியாவை வீழ்த்த சிறப்பு திட்டங்கள் உள்ளன: முகமது ஷமி உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலியாவை வீழ்த்த சிறப்பு திட்டங்கள் உள்ளன: முகமது ஷமி உற்சாகம்

கொல்கத்தா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடைபெறும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இது குறித்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கூறுகையில், ‘’ஆஸ்திரேலியா கடினமான அணி. அவர்களை எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்த சிறப்பு திட்டங்கள் உள்ளன. ஆனால் அதை வெளியிட முடியாது.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அவர்களுக்கான திட்டங்களும் எங்களிடம் உள்ளன.



முன்பு இருந்ததை விட ஆஸ்திரேலியா தற்போது மிகவும் வலுவாக உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்து விட முடியும் என்று கூறுவது கடினமானது.

எனினும் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளித்திருப்பது நல்ல விஷயம்தான்’’ என்றார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. கொல்கத்தாவை சேர்ந்தவரான முகமது ஷமி, முதல் முறையாக ஈடன் கார்டன் மைதானத்தில், ஒரு நாள் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளார்.

இது குறித்து முகமது ஷமி கூறுகையில், ‘’எனது ஹோம் கிரவுண்டில், ஒரு நாள் போட்டியில் விளையாடுவது பெருமைப்பட வேண்டிய விஷயம்’’ என்றார்.



.

மூலக்கதை