‘வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும்’

தினமலர்  தினமலர்
‘வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும்’

புதுடில்லி : ‘வேளாண், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களுக்கு உதவ, தனி நிதி­யம் ஏற்­ப­டுத்த வேண்­டும்’ என, பல்­வேறு நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­கள், பிர­த­மர் மோடி­யி­டம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.

‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘புதிய இந்­தியா – 2022’ என்ற திட்­டத்­தில், 200 தலைமை செயல் அதி­கா­ரி­கள் இடம் பெற்ற, 6 குழுக்­களை அமைத்­துள்­ளது. இக்­கு­ழு­வி­னர், பிர­த­மர் மோடியிடம் தெரி­வித்த கருத்­துக்­களை, ‘நிடி ஆயோக்’ டுவிட்­ட­ரில் வெளி­யிட்­டு உள்­ளது.

அதன் விப­ரம்: பத்து கோடி விவ­சா­யி­க­ளுக்கு உதவ, 10 லட்­சம் வேளாண் தொழில்­மு­னை­வோரை உரு­வாக்க வேண்­டும். வேளாண், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்க, தனி நிதி­யம் ஏற்­ப­டுத்த வேண்­டும். விவ­சா­யி­களின் வரு­வாயை இரு மடங்கு உயர்த்த, அவர்­க­ளுக்கு துணை வரு­வாய் அளிக்­கும் தொழில்­களை உரு­வாக்க வேண்­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இக்­கு­ழுக்­கள், நாளைய நக­ரங்­களை வடி­வ­மைப்­பது; வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது; விவ­சா­யி­களின் வரு­வாயை இரட்­டிப்­பாக்­கு­வது; வங்கி, காப்­பீடு உள்­ளிட்ட துறை­களின் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண்­பது ஆகி­யவை தொடர்­பான பரிந்­து­ரை­களை, ‘நிடி ஆயோக்’ அமைப்­பிற்கு வழங்­கும்.

மூலக்கதை