‘ஆப்பிள்’ போன் வினியோகத்தில் எச்.சி.எல்., இன்போசிஸ்டம்ஸ்

தினமலர்  தினமலர்
‘ஆப்பிள்’ போன் வினியோகத்தில் எச்.சி.எல்., இன்போசிஸ்டம்ஸ்

புதுடில்லி : எச்.சி.எல்., இன்­போ­சிஸ்­டம்ஸ் நிறு­வ­னம், ஆப்­பிள் நிறு­வ­னத்­தின், ஐ – போன் உட்­பட, அதன் அனைத்து தயா­ரிப்­பு­க­ளை­யும், இந்­தி­யா­வில் வினி­யோ­கிக்க உள்­ளது.

இது குறித்து, எச்.சி.எல்., இன்­போ­சிஸ்­டம்ஸ் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஆப்­பிள் இந்­தியா நிறு­வ­னத்­தின் தயா­ரிப்­பு­களை வினி­யோ­கிப்­பது தொடர்­பாக, ஜூலை­யில் விவா­திக்­கப்­பட்டு, ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. சமீ­பத்­தில், இந்த வினி­யோ­கத்­திற்­கான ஒப்­பு­தல் கிடைக்­கப் பெற்­றது. இதை­ய­டுத்து, ஐ – போன் உட்­பட, ஆப்­பி­ளின் அனைத்து தயா­ரிப்­பு­களும், உள்­நாட்­டில், எங்­கள் நிறு­வ­னத்­தின் மூலம் வினி­யோ­கம் செய்­யப்­படும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

எச்.சி.எல்., இன்­போ­சிஸ்­டம்ஸ் நிறு­வ­னத்­து­டன், ஆப்­பிள் கூட்டு வைத்­துள்­ள­தன் மூலம், அதன் தயா­ரிப்­பு­கள், நாடு முழு­வ­தும் சென்­ற­டை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.தற்­போது, ஆப்­பிள் தயா­ரிப்­பு­களை, இந்­தி­யா­வில் வினி­யோ­கம் செய்ய, இன்­கி­ராம் மைக்ரோ, ரெடிங்டன், ராஷி பெரி­பெ­ரல்ஸ், பீடெல் டெலி­டெக் ஆகிய நிறு­வ­னங்­க­ளு­டன், ஆப்­பிள் கூட்டு வைத்­துள்­ளது.

மூலக்கதை