பாரம்பரிய உணவு கலையை ஆவணப்படுத்த முடிவு

தினமலர்  தினமலர்
பாரம்பரிய உணவு கலையை ஆவணப்படுத்த முடிவு

புதுடில்லி : இந்­தி­யா­வின் பாரம்­ப­ரிய உணவு வகை­க­ளை­யும், அவற்றை தயா­ரிக்­கும் வழி­மு­றை­க­ளை­யும் ஆவ­ணப்­படுத்த, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்­படும், தேசிய உணவு பாது­காப்பு மற்­றும் தர நிர்­ணய ஆணை­யம் முடிவு செய்­து உள்­ளது.

இது குறித்து, ஆணை­யத்­தின் தலைமை செயல் அதி­காரி, பவன் அகர்­வால் கூறி­ய­தா­வது: இந்­திய கலா­சா­ரத்­தில், உட­லுக்கு ஆரோக்­கி­யம் அளிக்­கும் உணவு வகை­க­ளுக்கு, தொன்று தொட்டு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­டு­கிறது. இந்­திய உணவு வகை­கள், உலக பிர­சித்தி பெற்­றவை. அவற்றை மேலும் பிர­ப­லப்­படுத்த, ஆணை­யம் முடிவு செய்­துள்­ளது. ஆரோக்­கி­ய­மான, சுவை­மிக்க பாரம்­ப­ரிய உண­வு­க­ளை­யும், அவற்­றின் செய்­முறை­க­ளை­யும், ஆவ­ணப்­படுத்த உள்­ளோம்.

யெஸ் வங்­கி­யைச் சேர்ந்த, யெஸ் குளோ­பல் இன்ஸ்­டி­டி­யூட் நிறு­வ­னத்­து­டன் இணைந்து, இப்­பணி மேற்­கொள்­ளப்­படும். இதற்­காக, ‘புட்­காஸ்ட்’ என்ற பிரத்­யேக வலை­த­ளம் உரு­வாக்­கப்­படும். இதில், முதற்­கட்­ட­மாக, நாட்­டின் மிகப் பாரம்­ப­ரி­ய­மான, 200 உணவு வகை­கள் மற்­றும் அவற்­றின் செய்­மு­றை­கள் இடம் பெறும். அத்­து­டன், உண­வு­க­ளின் சிறப்­பம்­சங்­கள், யாருக்கு இந்த உண­வு­கள் உகந்­தவை, எப்­போது அவற்றை சாப்­பிட வேண்­டும் என்ற விப­ரங்­களும் இருக்­கும்.

இது­த­விர, நாடு முழு­வ­தும், பாரம்­ப­ரிய உணவு மையங்­கள் அமைக்­க­வும் திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. மேலும், முக்­கிய நக­ரங்­களில், பாரம்­ப­ரிய உண­வு­க­ளுக்கு பிர­சித்தி பெற்ற வீதி­களை அடை­யா­ளம் கண்டு, அவற்­றுக்கு அங்­கீ­கா­ரம் வழங்­க­வும் திட்­ட­மிட்டு உள்­ளோம். இதன் மூலம், வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­யர், சுவை­மிக்க பாரம்­ப­ரிய உணவு வகை­கள் கிடைக்­கும் இடத்தை, சுல­ப­மாக அறிந்து கொள்ள முடி­யும். இது­த­விர, நாடு முழு­வ­தும், உணவு திரு­வி­ழாக்­கள் நடத்­த­வும் முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை