'சர்வைவா' பாடல் புரோமோ - கண்டு கொள்ளாத அஜித் ரசிகர்கள்

தினமலர்  தினமலர்
சர்வைவா பாடல் புரோமோ  கண்டு கொள்ளாத அஜித் ரசிகர்கள்

அஜித் இதற்கு முன்பு நடித்து வெளிவந்த 'வேதாளம்' படத்திற்கு பட வெளியீட்டிற்கு முன்பு டீசர் மட்டுமே வெளியிட்டார்கள். பட வெளியீட்டிற்குப் பிறகே 'ஆலுமா டோலுமா, வீர வினாயகா' பாடல்களின் லிரிக் வீடியோக்களை வெளியிட்டார்கள். மூன்று மாதம் கழித்துத்தான் 'ஆலுமா டோலுமா' பாடலின் முழு வீடியோவை வெளியிட்டார்கள். படம் வெளியாகி மூன்று மாதங்கள் கழித்து இந்த வீடியோ வந்திருந்தாலும் இதுவரை 2 கோடியே 73 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.

'வேதாளம்' படம் போல இல்லாமல் 'விவேகம்' படத்திற்கு பட வெளியீட்டிற்கு முன்பே பல வீடியோக்களை வெளியிட்டுவிட்டார்கள். படத்தின் டீசர், பாடல்களுக்கான டீசர், டிரைலர், லிரிக் வீடியோ என பல வந்ததால் எதைப் பார்ப்பது, எதை சாதனைக்குள்ளாக்குவது என்பதில் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் குழம்பிப் போய்விட்டார்கள் போலிருக்கிறது. அதனால்தான் இரண்டு நாளைக்கு முன்பாக வெளியான 'சர்வைவா' பாடலின் புரோமோவை அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். இரண்டு நாட்களில் வெறும் 2 லட்சம் பார்வைகள்தான் அந்த புரோமோவிற்குக் கிடைத்துள்ளன.

ஒருவேளை, படத்தின் டிரைலரிருந்த காட்சிகளை மட்டுமே 'சர்வைவா' பாடலின் புரோமோவில் சேர்த்ததும் காரணமாக இருக்கலாம். அது மட்டுமல்லாமல் 'சர்வைவா' பாடலின் லிரிக் வீடியோவே 1 கோடியே 21 லட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டதாலும், புரோமோ காட்சிகள் ரிபீட் ஆனதாலும் அவர்கள் அதை விரும்பவில்லை என்று தெரிகிறது. பாடலுக்கான ஒரிஜனல் காட்சிகளைச் சேர்த்திருந்தால் இந்த 'சர்வைவா' பாடல் புரோமோவும் ஏதாவது சாதனை புரிந்திருக்கலாம்.

மூலக்கதை