கௌரவ வேடத்தில் நடிக்கும் நிகிஷா பட்டேல்

தினமலர்  தினமலர்
கௌரவ வேடத்தில் நடிக்கும் நிகிஷா பட்டேல்

சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த மலையாளப்படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்' , அரவிந்த்சாமி, அமலாபால் நடிக்க 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் சித்திக்.

மம்முடி நடித்த கேரக்டரில் இப்படத்தில் அரவிந்த்சாமியும், நயன்தாரா நடித்த கேரக்டரில் அமலாபாலும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ஒரு கௌரவ வேடம் இடம் பெறுகிறது. மலையாளத்தில் இஷா தல்வார் இந்த வேடத்தில் நடித்திருந்தார்.

தமிழில் இந்த வேடத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். படத்தின் பட்ஜெட்டில் பாதி அளவுக்கு சம்பளம் கேட்டு அதிர வைத்தனர். கடைசியில் அந்த வேடத்தில் நிகிஷா பட்டேல் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மூலக்கதை