வெஸ்ட் இண்டீஸின் இளம் வீரர்களுக்கு கற்றுக்கொடுக்க யாரும் இல்லை: மைக்கேல் வாஹன் வருத்தம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெஸ்ட் இண்டீஸின் இளம் வீரர்களுக்கு கற்றுக்கொடுக்க யாரும் இல்லை: மைக்கேல் வாஹன் வருத்தம்

லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட்,  ஒரே ஒரு டி20, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு முன்னால் வெஸ்ட் இண்டீஸ் பரிதாபமாக தோற்றமளிக்கிறது.

இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கூறுகையில், ‘’வெஸ்ட் இண்டீஸ் அணி ஒவ்வொரு முறை இங்கிலாந்து வரும்போதும் மோசமாக விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர்.



சிறப்பாக விளையாட அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கற்றுக்கொடுக்க குறிப்பிடத்தகுந்த நபர்கள் யாரும் அங்கு இல்லை.

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இந்த தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வருத்தமான ஒன்றாக மாறிவிடுமோ என நான் உண்மையில் பயப்படுகிறேன்’’ என்றார்.

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்ட் லீட்ஸில் வரும் 25ம் ேததி தொடங்குகிறது.

.

மூலக்கதை