பரிஸ் பதினைந்தாம் வட்டாரத்தில் தற்காலிக அகதி முகாம்!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ் பதினைந்தாம் வட்டாரத்தில் தற்காலிக அகதி முகாம்!

கடந்த வெள்ளிக்கிழமை காலை பரிஸ் லாசப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள் இல்-து-பிரான்சின் பல பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மொத்தமாக 2000 அகதிகள் லாசப்பலில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 450 அகதிகள் பரிசின் புதிய மற்றும் தற்காலிகமான அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் porte de Versailles இல் தற்காலிகமாக அகதிகள் தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதன் பின்னால் உள்ள காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 20 கூடாரங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொன்றிலும் பத்து வரையான கட்டில்கள் உள்ளதாகவும் மொத்தமாக 200 பேர்வரை தங்கவைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை