சிவப்பு எச்சரிக்கையில் வீதி போக்குவரத்து! - 600 கிலோமீட்டர்கள் தூரத்துக்கு நெரிசல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சிவப்பு எச்சரிக்கையில் வீதி போக்குவரத்து!  600 கிலோமீட்டர்கள் தூரத்துக்கு நெரிசல்!!

இன்று சனிக்கிழமை பிரான்சின் அனைத்து பிரதான சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
கோடை விடுமுறை முடிவுக்கு வரும் வேளையில் உள்வரும் வீதிகள் (retours ) அனைத்தும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகும் எனவும், 600 கிலோமீட்டர்கள் தூரம் வரை வாகனங்கள் தடைப்படும் எனவும் வீதி கண்காணிப்பு நிறுவனமான Bison Futé அறிவித்துள்ளது. மிக குறிப்பாக Auvergne-Rhône-Alpes மாகாணம் மிக கடுமையான நெரிசலையும், இவ் மாகாணத்துக்கு கறுப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், A7, A8, A9 மற்றும் A61 ஆகிய சாலைகளில் அதிகளவான நெரிசல்கள் ஏற்படும் எனவும், முடிந்தவரை வாகன சாரதிகள் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு இன்று இரவு 7 மணிவரை நெரிசல்கள் நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை