அகதிகளுக்காக அமைக்கப்பட்டு வரும் கழிவறை மற்றும் குளியலறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
அகதிகளுக்காக அமைக்கப்பட்டு வரும் கழிவறை மற்றும் குளியலறை!!

கலே பகுதியில் தஞ்சமடைந்திருக்கும் அகதிகளுக்கான அடிப்படை வசதிகளாக, கழிவறை மற்றும் குளியலறை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது. 
 
கலே சட்டவிரோதமாக பல அகதிகள் தங்கியிருப்பது வாசகர்கள் அறிந்ததே. கலே பகுதியில் அகதி முகாம் ஒருபோதும் அமைக்கப்படமாட்டாது என அரசு அறிவித்தாலும், அப்பகுதியில் தொடர்ச்சியாக அகதிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். அங்கிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைய முற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைவாக, அடிப்படை வசதிகளாக 10 கழிவறையும், 5 குளிப்பதற்குரிய அறையும் கட்டித்தரும் பணியினை அப்பகுதி அரசு ஆரம்பித்துள்ளது.
 
தற்போது இங்கு 450 இல் இருந்து 700 வரையான அகதிகள் இங்கு வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தின் இறுதியில்  Lille  மாநில நீதிமன்றம் தெரிவித்த உத்தரவின் பேரிலேயே இந்த வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதும், நேற்று புதன்கிழமை இதன் பணிகள் ஆரம்பித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை