ஒரே ஓவரில் 26 ரன்...

தினகரன்  தினகரன்

பல்லெகெலே டெஸ்டில், இலங்கை வீரர் மலிண்டா புஷ்பகுமாரா நேற்று வீசிய ஒரு ஓவரில் ஹர்திக் பாண்டியா 26 ரன் விளாசி (4, 4, 6. 6, 6, 0)  மிரட்டினார். இதன் மூலமாக டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்தார். சந்தீப்  பட்டீல் மற்றும் கபில் தேவ் இருவரும் தலா 24 ரன் எடுத்திருந்த சாதனையை ஹர்திக் முறியடித்தார். 8வது வீரராகக் களமிறங்கிய ஹர்திக், 11வது வீரரான உமேஷ் யாதவுடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்தார். இதில் உமேஷ்  எடுத்தது 3 ரன் மட்டுமே (14 பந்து) என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 50 ரன்னை 61 பந்தில் எட்டிய ஹர்திக், அடுத்த 50 ரன்னை 25 பந்தில்  விளாசினார். n விஜய் மஞ்ரேக்கர், கபில்தேவ், அஜய் ரத்ரா, ஹர்பஜன் ஆகியோரைத் தொடர்ந்து, முதல்தர கிரிக்கெட் சதத்தை டெஸ்ட் போட்டியில் பதிவு செய்த  5வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஹர்திக் வசமாகியது.பைனலில் வோஸ்னியாக்கிரோஜர்ஸ் கோப்பை மகளிர் டென்னிஸ் ஒற்றையர்  அரை இறுதியில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 6-3  என்ற  நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்லோனி ஸ்டீபன்சை வீழ்த்தினார். மற்றொரு அரை  இறுதியில் உக்ரைனின் எலினா  ஸ்விடோலினா 6-1, 6-1 என சிமோனா ஹாலெப்பை  (ரோமானியா) மிக எளிதாக வென்றார். மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் பைனலில்  சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரருடன், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் மோதுகிறார்.பேட்ரியாட்ஸ் அபாரம்மதுரை சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 137 ரன்  வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 196/6 (எஸ்.பி.நாதன் 77, ஆனந்த் 33*); சூப்பர் ஜயன்ட்ஸ் 8.5 ஓவரில் 59 ரன்னுக்கு  ஆல் அவுட்.யுவராஜ் நீக்கம்இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ ஆல் ரவுண்டர் யுவராஜ் நீக்கப்பட்டுள்ளார். அஷ்வின், ஜடேஜாவுக்கு  ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தியா: கோஹ்லி (கேப்டன்), தவான், ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, ரகானே, கேதார்  ஜாதவ், டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சாஹல், பூம்ரா, புவனேஷ்வர், ஷர்துல் தாகூர்.

மூலக்கதை