டெல்லி காற்று மாசு; கங்குலி யோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி காற்று மாசு; கங்குலி யோசனை

கொல்கத்தா: இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, டெல்லி பெரோ ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு நிலவி வரும் காற்று மாசு, மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இதன் காரணமாக, இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பீல்டிங் செய்தனர். சுவாசிப்பதில் பிரச்னைகள் ஏற்பட்டதாக இலங்கை வீரர்கள் புகார் தெரிவித்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி கூறுகையில், ‘’டெல்லியில் நிலவிய மாசு காரணமாக, கடந்தாண்டு ரஞ்சி டிராபி தொடரில், பெங்கால்-குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. 4 நாட்களும் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

நிச்சயமயாக, இந்த விஷயத்தில் பிரச்னைகள் உள்ளன.

எவ்வளவு பெரிய பிரச்னை? என்பது நமக்கு தெரியாது.

ஏனென்றால் நாம் அதில் இருந்து தொலைவில் இருக்கிறோம். கிரிக்கெட் களத்தில் மாஸ்க்கை பார்ப்பது கவலையாக உள்ளது.

சுவாசம் என்பது முறையாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எப்படி சுவாசிக்கின்றனர்? எப்படி ஓடுகின்றனர்? எப்படி கிரிக்கெட் விளையாடுகின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை.

குளிர்காலத்தில் டெல்லியில் போட்டிகளை நடத்துவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்.

தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது புத்தாண்டுக்கு பின்பாகவோ அல்லது பிப்ரவரி, மார்ச் மாதங்களிலோ டெல்லிக்கு போட்டிகளை வழங்கலாம்’’ என்றார்.

.

மூலக்கதை