ஆஷஸ் 2வது டெஸ்ட்: ஜேக் பாலை நீக்க வேண்டும்: இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் அறிவுரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஷஸ் 2வது டெஸ்ட்: ஜேக் பாலை நீக்க வேண்டும்: இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் அறிவுரை

அடிலெய்டு: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரில், இதன் மூலம் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, வரும் டிசம்பர் 2ம் தேதி, அடிலெய்டில் தொடங்குகிறது.

இதில், வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து தீவிர பயிற்சி எடுத்து வருகிறது.

முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பால் முதல் இன்னிங்ஸில் மட்டும் 1 விக்கெட் கைப்பற்றினார்.

அடிலெய்டில் நடைபெறவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.


.

மூலக்கதை