95 வீதம் எரிந்த உடல்! - மீட்டெடுத்த பரிஸ் மருத்துவர்கள்! - உலக சாதனை!!

PARIS TAMIL  PARIS TAMIL
95 வீதம் எரிந்த உடல்!  மீட்டெடுத்த பரிஸ் மருத்துவர்கள்!  உலக சாதனை!!

 

கிட்டத்தட்ட உடலின் அனைத்து பாகமும் தீயில் எரிந்த நிலையில், நபர் ஒருவரை பரிஸ் மருத்துவர்கள் தோல் மாற்றம் செய்து காப்பாற்றியுள்ளார்கள். இதுபோல் இடம்பெறுவது உலகின் இதுவே முதன் முறை என தெரிவிக்கப்படுள்ளது. 
 
33 வயதுடைய Franck எனும் நபருக்கே இது போல் தோல் மாற்றம் இடம்பெற்றுள்ளது. இதுவரை உலகில் இதுபோன்ற மருத்துவம் உடலின் சிறு பகுதிகளுக்கு மாத்திரமே இடம்பெற்றிருந்தது. ஆனால் முதன் முறையாக 95 வீதம் எரிந்த உடலை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளார்கள். குறித்த நபரின் இரட்டை பிறவியான அவனது சகோதரின் தோலில் இருந்தே இவருக்கு தோல் வழங்கப்பட்டுள்ளது என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பரிசில் உள்ள Saint-Louis மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் புனரமைப்பு பகுதியின் தலைமை மருத்துவர் Maurice Mimoun, இது குறித்து தெரிவிக்கும் போது, 'உலகின் முதல் தடவை இது போன்றதொரு சிகிச்சை இடம்பெற்றுள்ளது. நாங்கள் முதல் தடவை ஒரு உடலின் 95 வீதமான தோலை மாற்றி அமைத்துள்ளோம்!' என நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்பாக உலகில் இடம்பெற்ற தோல் மாற்றுதல் சிகிச்சையில் சராசரியாக 45 வீதமான பகுதி மாற்றப்பட்டும், அதிகபட்சமாக ஒருதடவை 68 வீதமான பகுதிகள் மாற்றப்பட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. உலகின் முதன் முறையாக, பரிஸ் மருத்துவர்கள் தான் 95 வீதம் தோல் மாற்று சிகிச்சையை மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
 

 

மூலக்கதை