ஊடகவியலாளரை தாக்கிய RATP அதிகாரி! - வழக்கு பதிவு!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஊடகவியலாளரை தாக்கிய RATP அதிகாரி!  வழக்கு பதிவு!!

ஊடகவியலாளர் ஒருவர் RATP அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 
 
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் Raphael Godechot, RATP அதிகாரிகளின் கண்காணிப்புக்களையும், சோதனை நடவடிக்கைகளையும் படம் பிடித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது RATP அதிகாரி ஒருவர் குறித்த ஊடகவியலாளரை அடித்தும், கழுத்தை பலமாக பிடித்து அழுத்தியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நான் ஒரு ஊடகவியலாளன். எனக்கு படம் பிடிப்பதற்கு உரிமை உண்டு!' என  Raphael Godechot தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததில் இருந்து, 'நான் தொலைபேசி ஒன்றின் மூலம் படம் பிடித்துக்கொண்டிருக்கும் போது தாக்கப்பட்டேன். பின்னர் நான் எனது ஊடகவியலாளர் அடையாள அட்டையை எடுத்து காண்பித்தேன். அது பயனளிக்கவில்லை. என்னுடைய தொலைபேசியை பறித்து எறிந்தனர்.!' என அவர் குறிப்பிட்டார். 
 
இருந்தும், பிறிதொரு தொலைபேசியால் தொடர்ந்தும் படம் பிடித்ததாகவும், மீண்டும் வன்முறை தொடர்ந்ததாகவும் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

மூலக்கதை