சுய நிதியில் வர்த்தகம் புரியும் பெண் தொழில் முனைவோர்

தினமலர்  தினமலர்
சுய நிதியில் வர்த்தகம் புரியும் பெண் தொழில் முனைவோர்

புதுடில்லி : அரசு நிதி­யு­தவி திட்­டங்­கள் பல இருந்­தும், 10ல், 8 பெண் தொழில் முனை­வோர்­கள், சுய நிதி­யு­தவி மூலம் வர்த்­த­கம் புரி­வது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.


இது குறித்து, வலை­தள நிறு­வ­ன­மான, ‘ஷீட் ஒர்க்’ வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: மத்­திய, மாநில அர­சு­கள், தனி­யார் அமைப்­பு­க­ளு­டன் இணைந்து, தொழில் முனை­வோ­ருக்கு பல்­வேறு நிதி­யு­தவி திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கின்றன. அவை குறித்து, பெண் தொழில் முனை­வோர்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வு இல்­லா­த­தால், பயன் பெற முடி­ய­வில்லை. இத­னால், 80 சத­வீத பெண் தொழில் முனை­வோர்­கள், சுய நிதி­யில் வர்த்­த­கம் புரி­கின்­ற­னர். கோவா, ஜம்மு – காஷ்­மீர், கர்­நா­டகா, ராஜஸ்­தான், மேற்கு வங்­கம் ஆகிய, ஐந்து மாநி­லங்­களில், பெண் தொழில் முனை­வோர் ஊக்­கு­விப்பு திட்­டங்­கள் அதி­கம் உள்ளன.


தமி­ழ­கம், ஆந்­திரா, கேரளா உள்­ளிட்ட மாநி­லங்­களில், சிறிய மற்­றும் நடுத்­தர வியா­பா­ரங்­களில், பெண்­கள் அதி­கம் உள்­ள­னர். மொத்த பெண் தொழில்­மு­னை­வோ­ரில், அரு­ணாச்­சல பிர­தே­சம், மேகா­லயா மற்­றும் நாக­லாந்­தின் பங்கு குறை­வாக உள்ள போதி­லும், இம்­மா­நி­லங்­களில், ஆண்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், பெண் தொழில் முனை­வோர் அதி­கம் உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை