திவால் சட்டத்திருத்தம்; அவசர சட்டத்திற்கு ஒப்புதல்

தினமலர்  தினமலர்
திவால் சட்டத்திருத்தம்; அவசர சட்டத்திற்கு ஒப்புதல்

புதுடில்லி : ‘‘திவால் சட்­டத்­தி­ருத்­தம் தொடர்­பான அவ­சர சட்­டத்­திற்கு, மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு ஒப்­பு­தல் வழங்கி உள்­ளது,’’ என, மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி தெரி­வித்து உள்­ளார்.


வாராக்­க­ட­னுக்­காக, பல நிறு­வ­னங்­கள் மீது, திவால் சட்­டத்­தில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது. இந்­நி­று­வ­னங்­கள் விற்­ப­னைக்கு வரும் போது, வாங்­கு­வோர் குறித்து, திவால் சட்­டத்­தில் எந்த வரை­ய­றை­யும் செய்­யப்­ப­ட­வில்லை. இத­னால், திவால் நிறு­வ­னத்தை, அதன் நிறு­வ­னரே, குறைந்த விலை­யில் மீண்­டும் வாங்­கும் சாத்­தி­யம் உள்­ளது. இதை தடுக்க, ‘திவால் சட்­டத்­தில் திருத்­தம் செய்ய வேண்­டும்’ என, 14 உறுப்­பி­னர்­கள் கொண்ட குழு, மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைத்து உள்­ளது.


இதை­யேற்று, திவால் நிறு­வ­னத்தை, பணம் இருந்­தும் வேண்­டு­மேன்றே கடனை திரும்­பச் செலுத்­தா­மல் இருந்த நிறு­வ­னர்­கள், மோசடி வழக்­கில் சிக்­கிய நிறு­வ­னர்­கள் ஆகி­யோர் வாங்க தடை செய்­யும் விதி, திவால் சட்­டத்­தில் சேர்க்­கப்­பட்டு உள்­ளது. ‘திவால் சட்­டத்­தி­ருத்­தம் தொடர்­பான அவ­சர சட்­டத்­திற்கு, பார்­லி­மென்­டின் குளிர்­கால கூட்­டத்­தொ­ட­ரில் ஒப்­பு­தல் பெறப்­படும்’ என, அருண் ஜெட்லி தெரி­வித்­தார்.

மூலக்கதை