கடந்த வருடத்தில் - ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் திருட்டு!!

PARIS TAMIL  PARIS TAMIL
கடந்த வருடத்தில்  ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் திருட்டு!!

பிரான்சின் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 108,000 மகிழுந்துகள் திருடப்பட்டுள்ளன. தவிர மிக அதிகமாக திருடப்பட்ட மகிழுந்துகள் பட்டியல் ஒன்றும் வெளியாகியுள்ளது. 
 
40 Million d'Automobilistes எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, பிரான்சில் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு முறை ஒரு மகிழுந்து திருடப்படுகிறது என தெரிவித்துள்ளது. தவிர பிரான்சில் அதிகம் திருடப்படும் மகிழுந்துகளில், Smart Fortwo II எனப்படும் சிறிய ரக மகிழுந்து தான் அதிகம் திருடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் Land Rover Range Rover மகிழுந்தும், மூன்றாம் இடத்தில் அதன் Evoque மொடல் மகிழுந்தும் உள்ளது. இந்த வரிசையில் 10 வது இடத்தில் BMW X5 E70/LCI மகிழுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 108,000 மகிழுந்துகள் திருடப்பட்டுள்ளது. இவற்றில் 52 வீதமான மகிழுந்துகள் வீதியில் தரித்துவிடப்பட்டிருக்கும் போது திருடப்பட்டுள்ளன. 31 வீதமானவை தரிப்பிடத்தில் இருக்கும் போதும், 12 வீதமானவை திருத்துமிடத்தில் இருக்கும் போது திருடப்படுகின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூலக்கதை