6,25,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட தங்க இலை!!

PARIS TAMIL  PARIS TAMIL
6,25,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட தங்க இலை!!

மாமன்னன் நெப்போலியனின் கிரீடத்தில் பதிக்கப்பட்டிருந்த தங்க இலை ஒன்று 6,25,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.  
 
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள Fontainebleau பகுதியில் இந்த ஏலம் நேற்று 19 ஆம் திகதி இடம்பெற்றது. பரிசில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெப்போலிய மன்னனின் கிரீடத்தில் பதிக்கப்பட்டிருந்த தங்க இலை ஒன்றே இவ்வாறு 6,25,000 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது. Osenat நிறுவனம் மேற்கொண்டிருந்த இந்த ஏலத்தில், குறித்த தங்க இலையின் விலை அதிகபட்சமாக 100,000 இல் இருந்து 150,000 யூரோக்கள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த இலையானது நெப்போலியனின் கிரீடத்தின் முன் பகுதியில் (நெற்றி)  பொறிக்கப்பட்டிருந்தது. அதில் பொறிக்கப்பட்டிருந்த பல தங்க இலைகளில் பல முன்னரே காணாமல் போயுள்ளதாகவும், இவற்றில் ஆறு இலைகளை அகற்றி  Martin-Guillaume Biennais மன்னன் தனது ஆறு மகள்களுக்கும் பரிசளித்ததாக Osenat நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இந்த கீரீடமானது நெப்போலியனுக்காக தங்கம் மற்றும் பவளம் கொண்டு 1804 ஆம் ஆண்டு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை