ஒரு தொன்னுக்கும் அதிகமாக கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்! - 20 பேர்கள் அதிரடி கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஒரு தொன்னுக்கும் அதிகமாக கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்!  20 பேர்கள் அதிரடி கைது!!

சர்வதேச போதைமருந்து கடத்தல் கும்பல் ஒன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 பேர்கள் வரை கைது செய்யப்பட்டதோடு, ஒரு தொன்னுக்கு மேற்பட்ட கொக்கைன் வகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 
 
Bordeaux நகரில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மிகப்பெரும் அதிரடி சோதனை நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சில வெகிநாட்டவரும் உள்ளனர்.  காவல்துறையினர் தரப்பில், 'கடத்தல்காரர்கள் கப்பல் மற்றும் படகில் போதைமருந்துகளை கடத்தி, பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்துள்ளார்கள்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்கைன் Bayonne (Pyrénées-Atlantiques)  நகரில் உள்ள இவர்களது தலைமை இடமாக செயற்பட்டு வந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஒரு தொன்னுக்கும் அதிகமான இந்த கொக்கைனின் மதிப்பு 100 மில்லியன் யூரோக்களாகும். 
 
போதைப்பொருள் மீட்பின் போது 10 நபர்களும், மீதமானவர்கள் அதன் பின்னரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கொலப்பியா, ஸ்பெயின், பிரான்ஸ் நாட்டு குடியுரிமை கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை