‘ஆம்பர் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் கடனை செலுத்த பங்குகளை விற்கிறது

தினமலர்  தினமலர்
‘ஆம்பர் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் கடனை செலுத்த பங்குகளை விற்கிறது

டேராடூன் : டில்லி தலை­ந­கர் பிராந்­தி­யத்­தில், குரு­கி­ரா­மைச் சேர்ந்த, ‘ஆம்­பர் என்­டர்­பி­ரை­சஸ்’ நிறு­வ­னம், ஒப்­பந்த அடிப்­ப­டை­யில், ‘கோத்­ரெஜ், வோல்­டாஸ்’ உட்­பட, பல நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘ஏசி, வாஷிங் மெஷின்’ மற்­றும், ‘ரெப்­ரி­ஜி­ரேட்­டர்’ உதி­ரி­பா­கங்­களை தயா­ரித்து அளித்து வரு­கிறது.நாட்­டில், ஏழு இடங்­களில், 10 தொழிற்­சா­லை­களை கொண்ட இந்­நி­று­வ­னத்­திற்கு, 415 கோடி ரூபாய் கடன் உள்­ளது.இக்­க­டனை திரும்­பச்செலுத்­த­வும், நிர்­வாக நடை­மு­றை­க­ளுக்கு தேவை­யான நிதியை திரட்­ட­வும், இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது.‘‘இதற்­கான விண்­ணப்­பம், தற்­போது, ‘செபி’யின் பரி­சீ­ல­னை­யில் உள்­ளது. இம்­மாத இறுதி அல்­லது டிசம்­பர் முதல் வாரத்­தில், பங்கு விற்­ப­னைக்கு அனு­மதி கிடைக்­கும்,’’ என, ஆம்­பர் எண்­டர்­பி­ரை­சஸ் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர், தல்­ஜித் சிங் தெரி­வித்­துள்­ளார்.இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 555 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. அதில், 345 கோடி ரூபாய் கடனை திரும்­பச் செலுத்­து­வ­தற்கு பயன்­ப­டுத்­தும் எனத் தெரி­கிறது.

மூலக்கதை