மறைந்தார் ஜானா

தினகரன்  தினகரன்

செக் குடியரசை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஜானா நோவோட்னா (49 வயது). விம்பிள்டனில் 1998ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றவர். இரட்டையர் பிரிவில் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்தவர் நேற்று காலமானார். விம்பிள்டன் கோப்பையுடன் அவர் போஸ் கொடுக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ள மகளிர் டென்னிஸ் சங்க தலைமை செயலதிகாரி ஸ்டீவ் சைமன், ‘களத்தில் மட்டுமல்ல... வெளியேயும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஜானாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. டபுள்யு.டிஏ வரலாற்றில் ஜானா நட்சத்திரம் என்றென்றும் ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கும்’ என்று தகவல் பதிந்துள்ளார். முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மூலக்கதை