வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

வெளிநாட்டுக்குப்  பணிப் பெண்ணாக சென்று, பாரிய காயங்களுடன் பெண் ஒருவர் இலங்கை திரும்பியுள்ள சம்பவம் ஒன்று கலேவளை பகுதியில் நிகழ்ந்துள்ளது.
 
கலேவளை - பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான இவருக்கு, நான்கு வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
 
குருநாகல் வௌிநாட்டு வேலை வாய்ப்பு துணைப் பணியகம் ஒன்றின் தலையீட்டுடன், அவரின் விருப்பத்தினோடு, போலி ஆவணங்களை தயாரித்து, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி அரேபியாவுக்கு தொழிலுக்காகச் சென்றுள்ளார்.
 
அங்கு சென்ற அவருக்கு மூன்று மாதங்கள் வரை எந்தப் பிரச்சினையும் எழவில்லை.
 
அதன் பின்னர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும், இது பற்றி தனது உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதால்  முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே அந்த வீட்டில் இருந்து வௌியேற முடிவெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இவரது உடலில் பாரிய காயங்கள் பல ஏற்பட்டிருப்பதோடு, சம்பளம்  ஒன்றும் வழங்கப்படாமல் கறுப்பு நிற ஆடையுடன் மட்டும் விமான நிலையத்தில் தான் இறக்கிவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
அங்கிருந்த இலங்கைப் பெண் ஒருவரால் வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டே தான் நாட்டுக்கு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
தற்போது இவரை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,  தனது மனைவிக்கு இழைக்கப்பட்ட  அநீதிகளுக்கு  உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என, அப் பெண்ணின் கணவர்  கோரியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை