இலங்கையர்களை குறித்து வைத்து ஏமாற்றிய வெளிநாட்டவர்!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையர்களை குறித்து வைத்து ஏமாற்றிய வெளிநாட்டவர்!

கடிதம் மூலம் பணப் பரிசில் கிடைக்கும் என்று அறிந்தவுடன் பணத்தை கொடுப்பதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

இலங்கையில் தங்கியிருந்து, பலரை ஏமாற்றி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
 
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர், இலங்கையர்களுக்கு உதவி செய்வதாகக்கூறி குலுக்கல் சீட்டு முறையில் பரிசில்கள் கிடைத்துள்ளதாகக் கூறி, நாட்டின் பல இடங்களிலுள்ள பலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
 
30 வயதான கொட்வின் நீவாபான என்ற நைஜீரியப் பிரஜை 3 மாதங்களுக்கு முன்னர் காலி உனவடுன பிரதேசத்திற்குச் சென்று அங்குள்ள ஒருவரை சந்தித்து வாடகைக்கு வீடு தேடிக் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
 
அதன்படி 30 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை வீடொன்றை குறித்த நைஜீரியப் பிரஜைக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
 
இதன்பின்னர் இருவரும் நண்பர்களாகி, சந்தேக நபரான நைஜீரியப் பிரஜை வாடகை வீட்டைப் பெற்றுக் கொடுத்த நபரின் வீட்டிற்குச் சென்று நண்பர்களாகப் பழகியுள்ளனர்.
 
இதன்பின்னர் சந்தேக நபரான நைஜீரியப் பிரஜை, குறித்த இலங்கை நபருக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
 
அதற்காக புதிய வங்கிக் கணக்கொன்றை திறந்து தருவதாகவும் மற்றும் வங்கிப் புத்தகங்களையும் ஏரிஎம் கார்ட்டையும் தான் வைத்துக்கொள்வதாகவும் ஏனென்றால் தான் வைப்பிலிடும் பணத்தை வீண் செலவு செய்வதைத் தடுப்பதற்காகவே வங்கிப் புத்தகத்தை வாங்கியதாகவும் நைஜீரிய பிரஜை கூறியுள்ளார்.
 
இதன்படி குலுக்கல் சீட்டின் மூலம் பணம் தருவதாகக் கூறி, இந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கூறியதற்கிணங்க பலர் பணம் அனுப்பியுள்ளனர்.
 
சில நாட்களின் பின்னர் நைஜீரியப் பிரஜை இந்த வங்கிக் கணக்குக்களில் இருந்து 31 இலட்சம் ரூபாவைப் பெற்றுள்ளதாகத் அறியவந்துள்ளது.
 
இதனைத் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த பெண் நண்பியை காலிக்கு வருமாறு நைஜீரியப் பிரஜை அழைத்துள்ள நிலையில், அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
சந்தேக நபர் இவ்வாறான பண மோசடி குற்றச்சாட்டுக்களில் இதற்கு முன்னர் சிக்கியுள்ளதாகவும் கடுவெல நீதிமன்றத்தில் இதுதொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
 
இவ்வாறாக பண மோசடி செய்வோரிடம் ஏமாற வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்வதுடன், வங்கிக் கணக்கு மற்றும் ஏரிஎம் கார்ட் என்பவற்றை எவரிடடும் கொடுக்க வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

கடிதம் மூலம் பணப் பரிசில் கிடைக்கும் என்று அறிந்தவுடன் பணத்தை கொடுப்பதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

மூலக்கதை