அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டி; முகேஷ் அம்பானியின் அடுத்த இலக்கு

தினமலர்  தினமலர்
அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டி; முகேஷ் அம்பானியின் அடுத்த இலக்கு

மும்பை : ரிலை­யன்ஸ் குழும தலை­வர், முகேஷ் அம்­பானி, அடுத்து, வலை­த­ளத்­தில் பொருட்­களை விற்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு போட்­டி­யாக உரு­வெ­டுக்க உள்­ள­தாக, ‘மார்­கன் ஸ்டான்லி’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

‘ஆர்­ஜியோ’ மூலம், தொலை தொடர்பு துறையை அதி­ர­டி­யாக கலக்­கிய முகேஷ் அம்­பானி, அடுத்து, ‘அமே­சான், பிளிப்­கார்ட்’ போன்ற வலை­தள சந்தை நிறு­வ­னங்­க­ளுக்கு போட்­டி­யாக உரு­வெ­டுக்க உள்­ளார். இதற்­காக அவர், தனி நிறு­வ­னத்தை உரு­வாக்­கா­மல், ‘ஆர்­ஜியோ’வை பயன்­ப­டுத்­து­வார். குறு­கிய காலத்­தில், 14 கோடி சந்­தா­தா­ரர்­களை சேர்த்­துள்ள ஆர்­ஜியோ, தற்­போது, ‘ரீசார்ஜ்’ செய்­யும் போது, பல்­வேறு பொருட்­களை வாங்க, தள்­ளு­படி கூப்­பன்­களை வழங்க துவங்கி உள்­ளது. இதன் மூலம், ரிலை­யன்ஸ் குழு­மத்­தின், ‘பிரெஷ், டிஜிட்­டல், டிரென்ட்ஸ்’ உட்­பட, பல்­வேறு கடை­களில், சலுகை விலை­யில் பொருட்­கள் வாங்­க­லாம்.

இல­வச அழைப்­பு­கள் மற்­றும் இணைய வச­தி­யு­டன் கிடைக்­கும், ‘ஆர்­ஜியோ’ போன்­கள், ரிலை­யன்ஸ் குழும நிறு­வ­னங்­களின் விற்­ப­னைக்­கும் துணை புரி­யும். இந்த வகை­யில், ‘வரும் ஆண்­டு­களில், அமே­சான், பிளிப்­கார்ட் நிறு­வ­னங்­க­ளுக்கு போட்­டி­யாக, ரிலை­யன்ஸ் குழு­மம் விளங்­கும்’ என, மார்­கன் ஸ்டான்லி தெரி­வித்­துள்­ளது.

மூலக்கதை