சிம்பு, வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை ?

PARIS TAMIL  PARIS TAMIL
சிம்பு, வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை ?

 விஜய் ஆன்டனி நடித்துள்ள அண்ணாதுரை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(நவ., 15) காலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர்களை நடுத் தெருவில் நிறுத்தியிருக்கும் சில நடிகர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க உள்ளோம் எனப் பேசினார்.

 
“தயாரிப்பாளர் சங்கத்துல இப்ப புதுசா மூன்று புகார் வந்திருக்கு. எல்லாமே நடிகர்கள் சம்பந்தப்பட்ட புகார். கரெக்டா ஷுட்டிங்குக்கு வரதில்லை. 30 சதவீதம் படம் முடிஞ்சதுமே, இதோ படத்தை ரிலீஸ் பண்ணிக்குங்க, நான் முழுசா படம் முடிச்சிக் கொடுக்க மூணு வருஷம் ஆகும்னு சொல்லி ஒரு படத்தை ரிலீஸ் பண்ண கதை வந்துச்சி. அந்தப் படத்துக்காக 18 கோடி ரூபாய் கடனா கொடுத்திருக்காங்க. அந்த தயாரிப்பாளரோட நிலைமை என்ன ?.
 
மொத்த விஷயத்தையும் கேள்விப்படும் போது அவ்வளவு சங்கடமா இருக்கு. அந்த பஞ்சாயத்துக்காக அந்த ஹீரோவை சந்திக்க போன போது இரவு 11 மணிக்கு போன எங்களை விடியற்காலைல 5.30 மணிக்குதான் வந்து பார்த்தாரு. மொத்தம் 29 நாள்தான் அவர் ஷுட்டிங் வந்திருக்காரு, அப்படியே வந்த நாட்கள்லயும் 4 மணி நேரம் மேல அவர் இருந்ததில்லை. இப்படி பொறுப்பில்லாம வேறு எந்த நடிகரும் இந்தியாவுல இல்லை.
 
அடுத்தது நாம எல்லாரும் ரசிக்கக்கூடிய ஒரு காமெடியன் இருக்காரு. அவரைப் பார்த்து சிரிக்கவே முடியாத அளவுக்கு ஒரு தயாரிப்பாளரை காயப்படுத்தியிருக்காரு. நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்துலயும் நான் தலையிட மாட்டேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சொல்லிட்டாரு. இப்ப மூணு தயாரிப்பாளர்கள் எங்ககிட்ட வந்திருக்காங்க. கண்டிப்பா அந்த நடிகர்கள் மேல நடவடிக்கை எடுப்போம்,” என தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கே.இ.ஞானவேல்ராஜா தெரிவித்தார்.
 
கே.ஈ.ஞானவேல்ராஜா தெரிவித்த அந்த ஹீரோர் சிம்பு என்பதும், நகைச்சுவை நடிகர் வடிவேலு என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
 
சிம்பு நடுத் தெருவில் நிறுத்தியிருக்கும் தயாரிப்பாளர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், வடிவேலு நடுத் தெருவில் நிறுத்தியிருக்கும் தயாரிப்பாளர் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஷங்கர்.
 

மூலக்கதை