தோல்வியை நோக்கி தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள்! - அடுத்தது என்ன??!

PARIS TAMIL  PARIS TAMIL
தோல்வியை நோக்கி தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள்!  அடுத்தது என்ன??!

ஜனாதிபதி மக்ரோனின் தொழிலாளர் சட்டமூலத்துக்கு எதிராக தொழிற்சங்க அமைப்புகள் மேற்கொள்ளும் போராட்டங்கள் தோல்வியை நோக்கி பயணிப்பதாக பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
பிரதமர் எத்துவா பிலில், தொழிலாளர் சட்டமூலத்தின் இறுதி அறிக்கையை வாசித்ததன் பின்னர், CGT தொழிற்சங்க தலைவர் மீண்டும் தாம் வேலை நிறுத்தத்தில் குதிக்கப்போவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதன் முறையாக செப்டம்பர் 12 ஆம் திகதி மிக பிரம்மாண்டமான பணி பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தினை நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தியிருந்தன. 
 
அதன் பின்னர் செப்டம்பர் 21, ஒக்டோபர் 10 ஆம் திகதி உள்ளிட்ட திகதிகளில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்கள். ஆனால் இதில் ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களின் போதும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்துள்ளது. நேற்று ஒக்டோபர் 19 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் மிக சொற்பமான தொழிலாளர்கள் மாத்திரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். 
 
25,000 தொழிலாளர்கள் நாடு முழுவதும் கலந்துகொண்டார்கள் என தொழிற்சங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் தரப்பில் வெறுமனே 5500 பேர்கள் மாத்திரமே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எப்படி இருந்தாலும், இது கடந்த ஆர்ப்பாட்டங்களை விடவும் மிக குறைவானதாகும். 
 
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதன் வீரியம் குறைந்துள்ள நிலையில், தொழிற்சங்கங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து பல பல அரசியல் ஆர்வலர்கள் எதிர்வு கூறல்கள் வெளியிட்டுள்ளனர்.

மூலக்கதை