அகதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் நாடுகடத்தப்படுவீர்கள்! - மக்ரோன் தெரிவிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
அகதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் நாடுகடத்தப்படுவீர்கள்!  மக்ரோன் தெரிவிப்பு!!

சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் அகதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 
 
ஞாயிற்றுக்கிழமை அவர் வழங்கியிருந்த நேர்காணலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அகதிகள் தொடர்பான நிலைப்பாடு குறித்து கேட்கும் போது, அவர் இதனை குறிபிட்டார். சட்டவிரோதமாக பிரான்சில் வசிக்கும் அகதிகள் எவ்வித குற்றங்களில் ஈடுபட்டாலும், உடனடியாக அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்' என தெரிவித்தார். தவிர, நாங்கள் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவது குறித்து பேசவில்லை. இது முன்னதாகவே முடிவு எடுக்கப்பட்டுவிட்டது!' என தீர்க்கமாக மக்ரோன் குறிப்பிட்டார். 
 
மார்செய் தொடரூந்து நிலையத்தில் இரு பெண்கள் மீது தாக்குதல் நடத்திய  துனிசிய நாட்டு அகதி Ahmed Hanachi, தாக்குதலுக்கு இரண்டு நாட்கள் முன்பு லியோன் நகரில் வைத்து திருட்டு வழக்கொன்றில் கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை